நீலகிரி. ஏப்ரல். 09.
உதகை மாவட்ட தலைமை நூலக அரங்கத்தில் நீலகிரி மாவட்ட பொற்கிழி கவிஞர். மணிவண்ணன் எழுதிய எண்ணங்கள் 200 என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. தமிழ் செம்மல் புலவர் நாகராஜ் தலைமை வகித்தார் மாவட்ட நூலகர் தா. பி. ரவி முன்னிலை வகித்து பேசினார். குறிஞ்சி இலக்கிய மன்ற நிறுவனர் பட்டிமன்ற பேச்சாளர் கூடலூர் ராமமூர்த்தி அனைவரையும் வரவேற்று பேசினார். முன்னதாக திருப்பூர் தமிழ் உலக மையம் முனைவர் நாதன் ரகுநாதன் நூலை வெளியிட மேட்டுப்பாளையம் ரியல் எஸ்டேட் சுப்பிரமணி நூலை பெற்றுக்கொண்டார் தொடர்ந்து நீலகிரி மாவட்ட
கவிஞர்களின் கலந்து கொண்ட கவியரங்கம் நடைபெற்றது நூலக வாசகர் வட்ட தலைவர் அமுதவல்லி நீலமலை ஜேபி, பிரபு, ஜனார்த்தனன், லிங்கன், சக்தி சுரேஷ் , தமிழரசன், விஜயநாராயணன் ஆகியோர் கவிதை வாசித்தனர் நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக நீலகிரி மாவட்ட தமிழ் சங்க அரு. நாகநாதன், குறிஞ்சி இலக்கிய மன்ற தலைவர் கவிஞர். அகரம் சிவா, நீலமலை நிர்மலா, பீனா சுரேஷ், சமூக நலத்துறை அலுவலர் பாமா பிரகாஷ் கவிதாயினி ஷீரா, முன்னாள் கல்வி அதிகாரி பெள்ளி,மீட்சிபாசறை இலக்கிய குமார் ஆகியோர் நூல் திறனாய்வு செய்து பேசினர் கவிஞர் மணிவண்ணன் ஏற்புரையாற்ற கூடல் சக்திவேல் நன்றி உரையாற்றினார்.
நூல் வெளியீட்டு விழா நீலகிரி கவிஞர்கள் பங்கேற்பு

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics