ஈரோடு டிச 31
ஈரோடு மாவட்டம் நல்லாம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி யில்
என்ஜிபி பிளாக் என்ற புதிய கட்டிடம் ரூ.2 கோடியே 11 லட்சம் செலவில் கட்டப்பட்டு ள்ளது.
கே எம் சி எச் மற்றும் சென்ட்ரல் ரோட்டரி ஆகியவற்றின் சார்பில் இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. ஈரோடு நல்லாம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் இந்த பள்ளியின்
கிராமப்புற மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன் கே எம் சி எச் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் நல்லா ஜி பழனிசாமி தாம் பிறந்து வளர்ந்த நல்லாம்பட்டி கிராம பள்ளி மாணவர்களின் முன்னேற்றத்துக்காக இந்த கட்டிடத்தை கட்டி கொடுத்து உள்ளார். இதில் 28 வகுப்பறைகள் ஸ்மார்ட் வகுப்பரை மற்றும் நூலகமும் அமைந்துள்ளன
இந்த புதிய பள்ளி கட்டிடத்தை
அமைச்சர் முத்துசாமி திறந்துவைத்து பேசினார். சுப்பராயன் எம் பி மற்றும் உள்ளாட்சி நிர்வாகிகள் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில்
கே எம் சி எச் மருத்துவமனை தலைவர் நிர்வாக இயக்குனர் டாக்டர் நல்லா ஜி இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி துணை தலைவர் டாக்டர் தவமணி தேவி பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் உரையாற்றிய டாக்டர் நல்லா ஜி பழனிசாமி மாணவர்கள் தரமான கல்வி பெறுவதற்கும் அவர்கள் முன்னேற்ற பணிகளில் கே எம் சி எச் தொடர்ந்து அக்கறையுடன் பல்வேறு முன்னேற்றத்திற்கும் இப்புதிய கட்டிடம் உதவிகரமாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.