மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பாக கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி ஆகிய வட்டாட்சியர்கள் பயன்பாட்டிற்காக புதிய வாகனங்களை வழங்கியதையடுத்து
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், புதிய வாகனத்திற்கான சாவியை மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் . அவர்கள் ஊத்தங்கரை வட்டாட்சியர் .திருமால் அவர்களிடம் வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் ( பொது) .குமரன் உள்ளார்.



