தருமபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாவட்டத்திற்கான புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் மற்றும் பிற கல்வி உபகரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்கள். மாவட்ட ஆட்சித் தலைவர் பேசுகையில் தருமபுரி மாவட்டம் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் 100 சதவீதம் கல்வி பெற்ற மாவட்டமாக திகழ்கிறது. தமிழக அரசு இலவச புத்தக சீருடை, பேக் உள்ளிட்ட 14 வகையான பொருட்களை இலவசமாக வழங்கி வருகிறது. அதனை மாணவ, மாணவிகள் சரியாக பயன்படுத்தி நல்ல முறையில் படிக்க வேண்டும் என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன், நகர மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மே. அன்பழகன், தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, பள்ளியின் தலைமை ஆசிரியர் கலைச்செல்வி ,நகரச் செயலாளர் நாட்டான் மாது, பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தருமபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாவட்டத்திற்கான புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள்

Leave a comment