மதுரை மார்ச் 8,
மதுரை திருப்பரங்குன்றம் கோயிலுக்கு புதிய காவல் ஆய்வாளர் பதவியேற்பு
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு என தனி காவல் நிலையம் புதிதாக துவங்கப்பட்டுள்ளது. பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிதாக திருப்பரங்குன்றம் கோவிலுக்கென்று தனியாக காவல் நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கென்று புதிதாக காவல் ஆய்வாளர் நியமிக்கப்பட்டுள்ளார். புதிதாக தொடங்கப்பட்ட இக்காவல் நிலையத்தின் முதல் காவல் ஆய்வாளராக ராஜதுரை பொறுப்பேற்றுள்ளார். திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள தர்காவுக்கு ஆடு பலியிடச் சென்றதைத் தொடர்ந்து பெரும் போராட்டங்கள் நடைபெற்று வந்தது. இது குறித்து கோர்ட்டில் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் கோவிலுக்கென்று தனி காவல் நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.