By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புகையிலை தொடர்பான புற்றுநோய் பாதிப்புகளை குறைப்பதற்கான புதிய முயற்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > புகையிலை தொடர்பான புற்றுநோய் பாதிப்புகளை குறைப்பதற்கான புதிய முயற்சி
மதுரை

புகையிலை தொடர்பான புற்றுநோய் பாதிப்புகளை குறைப்பதற்கான புதிய முயற்சி

Last updated: June 4, 2025 11:46 pm
June 4, 2025
44 Views
Share
SHARE

புகையிலை தொடர்பான புற்றுநோய் பாதிப்புகளை குறைப்பதற்கான புதிய முயற்சியாக மதுரை அப்போலோ கேன்சர் சென்டர், வாய் புற்றுநோய் பரிசோதனை திட்டத்தை தொடங்கியுள்ளது

மதுரை, ஜூன் 04: உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, வாய்புற்று நோயை ஆரம்பகாலத்திலேயே கண்டறிவதற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புகையிலை பயன்பாட்டின் உடல்நல பாதிப்புகளையும் அதன் தாக்கத்தையும் எடுத்துரைக்கும் பிரச்சாரத்தை அப்போலோ மருத்துவமனை முன்வைக்கிறது. மதுரை அப்போலோ கேன்சர் சென்டர், புகையிலை பயன்பாட்டினால் இந்தியாவில் அதிகரித்து வரும் வாய் புற்றுநோய் பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில், ஒரு சிறப்பு வாய் புற்றுநோய் பரிசோதனை திட்டத்தை தொடங்கியுள்ளது. உலகளவில் வாய் புற்றுநோயினால் பாதிக்கபடுவோரில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் இருக்கிறார்கள். இங்கு ஆண்டுதோறும் 77,000 புதிய பாதிப்புகளும், 52,000 இறப்புகளும் பதிவாகின்றன. அதே சமயம் தாமதமான நோய் கண்டறிதல் மற்றும் போதிய விழிப்புணர்வு இல்லாததால், உயிர் பிழைக்கும் விகிதம் 50%க்கும் குறைவாக உள்ளது.

மதுரை அப்போலோ கேன்சர் சென்டர் புற்றுநோயியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். கே. பாலு மகேந்திரா மற்றும் கதிர்வீச்சு புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் ஜி. சதீஷ் சீனிவாசன் ஆகியோர் கூறியதாவது, “புகையிலை பயன்படுத்துபவர்களுக்கு வாய் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து 6 முதல் 7 மடங்கு அதிகம். வழக்கமான ஆரம்பகால கண்டறிதல் மற்றும் வாய் பரிசோதனைகள் மூலம் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளித்து உயிர்களை காப்பாற்ற முடியும்”

மதுரை அப்போலோ மருத்துவமனை, காது, மூக்கு, தொண்டை, தலை மற்றும் கழுத்து மற்றும் எண்டோஸ்கோபிக் ஸ்கல் பேஸ் அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர். பி. மீனா பிரியதர்ஷினி மற்றும் டாக்டர். ஜி. அருண் பிரபு கணேசன் ஆகியோர் வலியுறுத்தியதாவது, “கன்னத்தின் உட்புற சவ்வு மற்றும் நாக்கு ஆகியவை இந்த புற்றுநோயினால் பொதுவாக பாதிக்கப்படும் பகுதிகள் ஆகும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இதன் அறிகுறிகள் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகின்றன, குறிப்பாக இது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாத பொருளாதாரத்தில் பின்தங்கிய பகுதிகளில் இருக்கும் ஆண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். எங்களின் இந்த திட்டத்தில் மூலம் சரியான நேரத்தில் சரியான பரிசோதனை மேற்கொண்டு அவர்களை நோயில் இருந்து காக்க முடியும் .”

அப்போலோ மருத்துவமனைகளின், தலைமை இயக்க அதிகாரி டாக்டர். நிகில் திவாரி மேலும் கூறியதாவது, இந்த பரிசோதனையை எளிதில் அணுகக்கூடியதாகவும் குறைந்த விலையிலும் செய்ய, அப்போலோ கேன்சர் சென்டர் வெறும் ரூபாய் 499க்கு வழங்குகிறது, இதில் சிறப்பு புற்றுநோயியல் நிபுணர்கள் மற்றும் காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர்களால் விரிவான வாய்வழி பரிசோதனையும் அடங்கும். கூடுதலாக, இந்த பரிசோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படும் உள்நோயாளிகள் குறைந்த விலையில் சிகிச்சை பெறுவார்கள்.

அப்போலோ மருத்துவமனை, மதுரை மண்டலத்தின் தலைமை செயல் அதிகாரி டாக்டர். நிகில் திவாரி, மருத்துவ சேவைகளின் இணை இயக்குனர் டாக்டர் K. பிரவீன் ராஜன், புற்றுநோயியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். K. பாலு மகேந்திரா, கதிர்வீச்சு புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் ஜி. சதீஷ் சீனிவாசன், காது மூக்கு தொண்டை மருத்துவ சிகிச்சை நிபுணர்கள் டாக்டர். P. மீனா பிரியதர்ஷினி, டாக்டர்.G.அருண் பிரபு கணேசன், நிர்வாக துணை பொது மேலாளர் லாவண்யா மற்றும் மார்க்கெட்டிங் பிரிவு மூத்த மேலாளர் J. பிரேம் டேனியல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பண வெகுமதியும் பாராட்டு சான்றிதழும்
சாலை போக்குவரத்தில் விபத்தில்லா பாதுகாப்பு
அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில்
மாபெரும் மருத்துவ இலவச காப்பீட்டு திட்டம் முகாம்
திடீரென்று நெல் கொள்முதல் பணி நிறுத்தம்; விவசாயிகள் அவதி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

தென்தாமரைகுளம் அருகே மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி விழுந்து மெடிக்கல் ஊழியர் பலி

April 30, 2026
45 Views
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 200 தொகுதிகளை கைப்பற்றும்; மாநில அமைப்பு செயலாளர் சின்னத்துரை தகவல்
தெண்பெண்ணை ஆற்றில் 1.80 லட்சம் மீன்குஞ்சுகள்
பூலித்தேவன் 309ஆவது பிறந்த நாளினை
சந்தன கட்டையுடன் வாலிபர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account