திருப்பூர் ஜூலை: 21
புதிய பேருந்து நிலையத்தில் திருப்பூரில் இருந்து ராமேஸ்வரம் , செங்கோட்டை , பரமக்குடி , மன்னார்குடி, நாகர்கோவில், காரைக்குடி , கடலூர் உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும் , திருப்பூர் மாவட்டத்திற்குள் கணியூர் , கடத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கான நகர்ப்புற பேருந்துகள் என 19 புதிய பேருந்துகள் துவக்க விழா நடைபெற்றது.
இதில் அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் , மேயர் தினேஷ்குமார் ,
மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் , மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் , மண்டல தலைவர்கள் இல.பத்மநாபன் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு புதிய பேருந்துகள் பயணத்தை தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மு.பெ.சாமிநாதன் , திருப்பூர் மாவட்டத்திற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட 48 வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கம் நிறைவு செய்யப்பட்டுள்ளது.
இன்றைய தினம் திருப்பூரில் இருந்து செங்கோட்டை, பரமக்குடி, மன்னார்குடி, நாகர்கோவில், காரைக்குடி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும், தாராபுரத்திலிருந்து சென்னைக்கும், திருப்பூர் மாவட்டத்திற்குள் கடத்தூர் மற்றும் கணியூர் உள்ளிட்ட வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது இதனை அறிவித்த தமிழக முதல்வருக்கு திருப்பூர் மாவட்ட மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து பொதுமக்களின் கோரிக்கை வரும் பட்சத்தில் புதிய வழித்தடங்களிலும் பேருந்துகள் இயக்கப்படும். இளைஞரணி 45-வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் நிலையில் இளைஞர் அணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக வேண்டும் என்ற கோரிக்கையை வழிமொழிகிறேன். துணை முதல்வராக திறம்பட செயலாற்றக்கூடிய திறமை அவரிடம் உள்ளது. துணை முதல்வராகும் பட்சத்தில் தமிழகத்தில் இன்னும் சிறப்பான ஆட்சியை கொண்டுவர முடியும் அதனால் அவர் துணை முதல்வராவதை வழிமொழிகிறோம் என தெரிவித்தார். தொடர்ந்து தமிழகத்தில் சட்டமன்ற பிரச்சனை குறித்த கேள்விக்கு , அதிமுக ஆட்சி காலத்தில் பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது போல் அல்லாமல் ஆங்காங்கே சிறு சிறு சம்பவங்கள் நடந்தாலும் தமிழக அரசு நடுநிலையோடு செயல்பட்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கோவை லிமிடெட் மேலாண் இயக்குனர் ஜோசப் டயாஸ், பொது மேலாளர் செல்வகுமார், துணை மேலாளர்கள் ராஜேந்திரன், ஜோதி, மணிகண்டன் L.P.F.தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் திருப்பூர் மாவட்ட பொதுச்செயலாளர் K.துரைசாமி, இணைச்செயலாளர் G.மணி, சென்னியப்பன், சின்ன கண்ணன், சிதம்பர சாமி, குப்புசாமி, முருகானந்தம், சேகர், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.