கோவை அக்: 16
கோவைக்கு அருகே உள்ள பாலக்காடு மாவட்டம் வேலந்தா வளம் அருகே உள்ள அஹல்யா நீரிழிவு மருத்துவமனையில் நரம்பியல் மற்றும் எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை துறை சார்பில் சிறப்பு முகாம்கள் துவங்கப்பட உள்ளன. இது பற்றி நரம்பியல் நிபுணர் மருத்துவர். ரவிச்சந்திரன் கூறியதாவது கழுத்து வலி, முதுகு வலி, தலைவலி, பக்கவாதம், தலைசுற்றல், வலிப்பு, தூக்க கோளாறுகள், பார்க்கின்சன், நடுக்கம் போன்ற நரம்பியல் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு எங்கள் நரம்பியல் மறுவாழ்வு குழு உடனடி சிகிச்சை வழங்குகிறது, குறிப்பாக பக்கவாத நோய்கள் அறிகுறி தென்பட்ட நான்கரை மணி நேரத்திற்குள் நரம்பியல் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு நோயாளிகளை குணமடைய செய்கின்றோம். மேலும் இந்த முகாமில் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர். ஸ்ரீ கணேஷ் கூறும்போது கடுமையான முழங்கால் வலி, இடுப்பு வலி, தோள்பட்டை வலி, தசைநார் பிரச்சனைகள், தடகள விளையாட்டு போது ஏற்படும் காயங்கள், பாதிப்புகள், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ஏற்படும் எலும்பு தொடர்பான குறைபாடுகள் போன்றவற்றை இந்த சிறப்பு முகாமில் மிகக் குறைந்த கட்டணத்தில் மருத்துவம் செய்யப்படுகிறது. இம் முகாமில் பங்கேற்பவர்களுக்கு ஆய்வக சோதனைகள், ஸ்கேன், மற்றும் பிசியோதெரபி ஆகியவற்றின் 15 % சலுகைகள் கிடைக்கும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் பிற அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படும். மருத்துவமனையில் அனுமதி தேவைப்படும் நோயாளிகளுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.



