நாகர்கோவில் – அக்- 04,
கன்னியாகுமரி மாவட்டம் இடைக்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அக்டோபர் 02 முன்னிட்டு தூய்மை சேவை என்னும் நிகழ்ச்சியில் நேரு யுவ கேந்திரா வழியாக ஹார்ட் பீட் மன்றம் மாலைக்கோடு சார்பில் 50 க்கும் மேற்பட்ட மன்றத்தின் பொறுப்பாளர்கள் , உறுப்பினர்கள் , நண்பர்கள் மற்றும் பெரியவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவமனை வளாகத்தினை தூய்மை செய்து. குப்பையினை மக்கும் குப்பை , மக்காத குப்பை என தரம் பிரித்து. குப்பைகளை இடைக்கோடு பேரூராட்சி குப்பை சேகரிக்கும் வாகனத்தில் குப்பை கிடங்கிற்க்கு அனுப்பி வைத்து அனைத்து மறை உறுப்பினர்களும் தூய்மை இந்தியா உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந் நிகழ்ச்சியில்
செயலாளர் லிபின் ராஜ், உபத் தலைவர் சிஜூ, ஆகியோர் தலைமை வகித்தனர். புனித திருக்குடும்ப மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் விஜயகுமாரி முன்னிலை வகித்தார் . மற்றும் உறுப்பினர்கள் பிஜூ , அஜின்ஸ் , சஜித், சந்திப் , ஷெர்லின், ஜோஸ், ஜெபின் ராஜ், அருண், ஜோனி, மற்றும் 50 க்கும் மேற்பட்ட நண்பர்கள் கலந்து கொண்டனர் .