சங்கரன்கோவில் நகராட்சி நிர்வாகமும் சங்கரன்கோவில் வட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு இணைந்து நீதிமன்ற வளாகத்தில் வைத்து நில வேம்பு கசாயம் வழங்கபட்டது நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சியை நீதிபதிகள் துவக்கி வைத்தனர். வழக்கறிஞர்கள், குமஸ்தாக்கள் நீதிமன்ற அலுவலர்கள் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெற்றனர் நகராட்சி சார்பில் நகர மன்ற தலைவர் உமா மகேஸ்வரி ஆணையாளர் சபாநாயகம் சுகாதார அலுவலர் வெங்கட்ராமன் சுகாதார ஆய்வாளர்கள் கருப்பசாமி கைலாச சுந்தரம் ஆகியோர் கொண்ட குழுவினர் ஒத்துழைப்போடு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது



