புதுக்கடை , பிப்- 16
புதுக்கடை அருகே காப்புக்காடு பகுதி மாராயபுரம் என்ற இடத்தை சேர்ந்தவர் சரவணன் (37). கொத்தனார் வேலை செய்து வந்தார். இவருக்கு செல்வி (24) என்ற மனைவி மற்றும் 2 , 1 வயதுகளில் 2 பெண் பிள்ளைகள் உள்ளனர். சரவணன் கடன் தொல்லையால் அவதிப்பட்டு, குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்தவர் நேற்று வீட்டில் மனைவி இல்லாத நேரம் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.
வெளியே சென்ற செல்வி வந்து பார்த்து கணவரை உடனடியாக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு சரவணன் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக செல்வி அளித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.