புதுக்கடை, ஜன – 31
மேல் மிடாலம் பகுதி விக்டர் காலனியை சேர்ந்தவர் தாசன் மகன் ஷியாம் (27). மீனவரான இவர் கடல் தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் தேங்கா பட்டணத்தில் இருந்து மேல் மிடாலத்துக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். நெடுந்தட்டு என்ற பகுதியில் செல்லும் போது பைக் திடீரென நிலை தடுமாறி சாலையோரம் உள்ள சுவரில் மோதியுள்ளது.
இதில் தலையில் பலத்த காயமடைந்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் போது வழியில் ஷியாம் உயிரிழந்தார்.இது தொடர்பாக தாசன் அளித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.