கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், சர்தார் வல்லபாய் பட்டே அவர்களின் பிறந்த நாளை தேசிய ஒற்றுமை நாளாக கடைபிடிப்பதையொட்டி, தேசி ஒருமைப்பாட்டு நாள் உறுதிமொழியை மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு – அவர்கள் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர்.
ஆண்டுதோறும் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் பிறந்த நாளான அக்டோ 31 -ம் நாளை தேசிய ஒற்றுமை நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதேப்போல் இற வருடம் அக்டோபர் 31 தீபாவளி பண்டிகையையொட்டி அரசு விடுமுறை தினம் என்பதா தேசிய ஒற்றுமை நாளாக கடைபிடிக்கப்படுகிறது.
தேசிய ஒருமைப்பாட்டு நாள் உறுதிமொழி:
“இந்திய நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பையும் பேணுவதற் என்னையே உவந்தளிப்பேன் என்றும், இந்த நல்லியல்புகளை எனது நாட்டு மக்களிடை பரப்புவதற்கு அயராது பாடுபடுவேன் என்றும் உளமார உறுதியளிக்கிறேன். சர்தார் வல்லப பட்டேலின் தொலைநோக்குப் பார்வையாலும், நடவடிக்கைகளாலும் சாத்தியமாக்கப்பட ஒன்றிணைந்த தேசத்தின் நல்லுணர்வினைப் பேண நான் இந்த உறுதிமொழியை ஏற்கிறே எனது நாட்டின் உள் பாதுகாப்பினை உறுதி செய்ய எனது பங்களிப்பினை நல்குவேன் என்ற உளமாற உறுதி அளிக்கிறேன்” என்ற உறுதிமொழியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் .அ.சாதனைக்குறள், மாவட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) .பி.புஷ்பா, மாவட்ட ஆட்சியரின் நேர்மு உதவியாளர் (கணக்கு) .கதிரவன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந் கொண்டனர்.