திண்டுக்கல் மே : 23
தமிழ்நாட்டில் 5 மேற்பட்ட மாவட்டத்தில் பெண்கள் பாதுகாப்பு பணிகளும், தொழிலாளர் நலன் மற்றும் ஆலோசனைகள்,அரசு துறைகளுடன் இணைந்து அரசு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் 15000 மேற்பட்ட தொழிலாளர்களின் ஒற்றுமை உருவாக்கியது இளைஞர் நலன் மற்றும் கல்விக்காக கல்வி உதவி தொகை பெற்றுக் கொடுத்தது, சமத்துவம் , சமுதாய நல்லிணக்கம் செயல் பட்டதற்கு மாஸ் தொண்டு நிறுவனத்தின் தலைவரும், அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பின் மாநில இணைச் செயலாளருமான சேவ ரத்னா பி.பி.சக்திவேலுக்கு வெல்னஸ் பவுண்டேஷன் , சர்வதேச சமூக ஆர்வலர்களின் கூட்டமைப்பு மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் விஜிலென்ஸ் கவுன்சில் சென்டர் ஆஃப் இந்தியா அமைப்பின் மூலமாக தேசிய வீர ஒற்றுமைக்கான விருது வழங்கப்பட்டது. இவரை சமூக ஆர்வலர்களும் , உறுப்பினர்களும், வழக்கறிஞர்களும் பாராட்டி வருகின்றனர் .



