புது டெல்லியில் நடைபெற்ற “நேஷனல் எஜுகேஷனல் பிரில்லியன்ஸ்
விருதுகள் – 2024” நிகழ்ச்சியில் மதுரை , நாகமலை புதுக்கோட்டை யிலுள்ள கே.எம். ஆர். சர்வதேச பள்ளி சிறந்த சர்வதேச பள்ளி எனும் விருதினை பெற்றது.
இதற்கான விருதினை பள்ளி தாளாளர் பூ . கிருஷ்ணவேணி பெற்றுக் கொண்டார். விருதிற்கான போட்டியில் இந்தியா முழுமையிலிருந்தும் பல பள்ளிகள் பங்கு கொண்டன. கடுமையான போட்டிகளுக்கு நடுவே இப்பள்ளி தேர்வு பெற்றது, அதற்காக கடுமையாக உழைத்த முதல்வர்கள் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பள்ளியின் நிர்வாக பணியாளர்களை பள்ளி தாளாளர் வெகுவாக பாராட்டினார்.