தஞ்சாவூர்.ஏப்ரல் 24.
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக த்தில் தேசிய மாணவர் படையின் சார்பில் உலக பூமி நாள் விழா நடைபெற்றது
நிகழ்ச்சியில் தேசிய மாணவர் படை அணிவகுப்பு நிகழ்ச்சியும் பல்கலைக்கழக நுழைவாயில் அருகே உள்ள இடங்களை சுத்தம் செய்யப்பட்டது
துணைவேந்தர் பொறுப்பு குழு உறுப்பினர் பாரத ஜோதி தலைமை வகித்தார். பதிவாளர் (பொ)பன்னீர் செல்வம் முன்னிலை வகித்தார். தேர்வுகட்டுப்பாட்டு அலுவலர் (பொ) துளசேந்திரன், நூலக இயக்குனர் வேல்முருகன்,அரிய கையெழுத்து சுவடித்துறை இணை பேராசிரியரு ம், தேசிய மாணவர் படை ஒருங்கி ணைப்பாளரும் முனைவர் ஆதித்தன் நிகழ்வினை ஒருங்கிணைத்து நடத்தினார்
நிகழ்வில் துறை தலைவர்கள், கல்வியாளர்கள், கல்வி சார்ந்த பணியாளர்கள், தேசிய மாணவர் படை மாணவர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த மாணவர்களும் கலந்து கொண்டனர்.