திருவாரூர் பிப்ரவரி 12,
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட கந்தன்குடி கிராமத்தில், அம்பன், அம்பரன் என்ற இரு அசுரர்களை வதம் செய்வதற்காக அன்னை பராசக்தி காளி ரூபம் எடுத்து வந்த பொழுது தன்னுடன் வந்த குழந்தையான முருகன் உடன் இங்கு தங்கியதால் கந்தன்குடி என பெயர் பெற்றது.
இவ்வாறு வரலாற்று சிறப்புமிக்க இந்த கோவில் திருமண தோஷம் குழந்தை பாக்கியம் உள்ளிட்ட பல்வேறு பரிகார தளமாக விளங்கி வருகிறது.
மேலும் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம் அந்த வகையில் இன்று தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சுப்பிரமணியசாமி வள்ளி தேவசேனா சாமிக்கு 108 லிட்டர் பால் மஞ்சள் இளநீர் சந்தனம் போன்ற அபிஷேக திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.
இந்த தைப்பூச திருவிழாவில் கந்தன் குடி முருகனை தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்
மேலும் காவல்துறை சார்பில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்