நாகர்கோவில் அக் 1
குமரி மாவட்டம் பண்டைய காலத்தில் திருவிதாங்கூர் மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது அப்போது ஆண்டு தோறும் 10 நாட்கள் நடைபெறும் நவராத்திரி விழா குமரி மாவட்டம் தக்கலை அருகே பத்மநாபபுரம் அரண்மனையில் நடத்தப்பட்டது. அதன் பின் 1840 ஆம் ஆண்டில் சுவாமி திருநாள் மகாராஜா காலத்தில் நிர்வாக வசதிக்காக இந்த நிகழ்சி திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது. அப்படி நடத்தப்பட்ட காலத்தில் குமரி மாவட்டம் சுசீந்திரத்தில் இருந்து முன்னுதித்த நங்கை அம்மனும், வேளிமலை முருகனும், கம்பரால் வழங்கப்பட்ட பத்பநாபபுரம் அரண்மனையில் இருந்து சரஸ்வதி அம்மன் ஆகிய மூன்று சாமி சிலைகள் மிக பிரம்மாண்டமான ஊர்வலமாக திருவனந்தபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு 10 நாட்கள் நவராத்திரி விழா முடிவடைந்த பின் மீண்டும் ஊர்வலமாக குமரி மாவட்டத்திற்கு கொண்டு வரப்படுவது வழக்கம் . அந்த வகையில் வரும் 3 ஆம் தேதி நவராத்திரி விழா தொடங்க இருப்பதால் மன்னர்கள் கால பாரம்பரிய முறைப்படி குமரி மாவட்டத்தில் இருந்து சாமி சிலைகள் புறப்படும் நிகழ்சி வரும் ஒன்றாம் தேதி தக்கலை அருகே பத்பநாபபுரம் அரண்மனையில் இருந்து கோலாகலமாக இரு மாநில அறநிலை துறை மற்றும் காவல்துறை பாதுகாப்புடன் நடைபெற உள்ளது. அந்த நிகழ்சியின் முதற்கட்டமாக இன்று சுசீந்திரத்தில் இருந்து முன்னுதித்த நங்கை அம்மன் புறப்படும் நிகழ்சி நடைபெற்றது. இரு மாநில போலீசர் இணைந்து செண்டை மேளங்கள் முழங்க துப்பாக்கி ஏந்தி மரியாதையுடன் சாமி ஊர்வலம் கோலாகலமாக புறப்பட்டது. இந்த ஊர்வலம் நாகர்கோவில் , சுங்கான் கடை, வில்லுகிறி, வழியாக தக்கலை அருகே உள்ள பத்மநாபபுரம் அரண்மனையை சென்றடையும் இதே போல் வேளிமலை முருகன் சாமியும் நேற்று மாலைக்குள் அரண்மனைக்கு வந்து சேர்ந்து விடும் இன்று பத்பநாபபுரம் அரண்மனையில் இருந்து மன்னரின் உடைவாளுடன் சரஸ்வதி அம்மன், வேளிமலை முருகன். சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் ஆகிய 3 சாமி சிலைகளும் அரண்மனையில் இருந்து பிரம்மாண்டமான ஊர்வலமாக திருவனந்தபுரத்திற்கு புறப்படும் நிகழ்ச்சி நடைபெறும் . சாமி சிலைகளுக்கு ஊர்வலத்தில் பூஜை பொருட்களை கொண்டு பொதுமக்கள் வழி அனுப்பி வைப்பார்கள். இந்த நிகழ்ச்சிகளில் இரு மாநில அறநிலை துறை அதிகாரிகள் இரு மாநில போலீசார் இணைந்தே . ஊர்வலத்தில் பணியாற்றுவார்கள் என்பது குறிப்பிடதக்கது.
இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி, திருக்கோவில்கள் மண்டல இணை ஆணையர் பொறுப்பு அன்புமணி கோவில்களின் இணை ஆனையர் பழனி, இந்து அறநிலையத்துறை அறங்காவல் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன், துளசிதரன் நாயர், ராஜேஷ், ஜோதிஷ்குமார், சுந்தரி, சுசீந்திரம் பேரூராட்சி தலைவர் அனுசியா, முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் தளவாய் சுந்தரம், எம் ஆர் காந்தி மற்றும் முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.