மதுரை பிப்ரவரி 23,
மதுரை மாநகராட்சி சுந்தரராஜபுரம் மேல்நிலைப்பள்ளியில் நம்ம ஸ்கூல் நம்ம பள்ளி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட புதிய கணினி ஆய்வகத்தை மேயர் இந்திராணி பொன்வசந்த் திறந்து வைத்து பார்வையிட்டார். அருகில் துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி, கல்விக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன், கல்வி அலுவலர் ஜெய்சங்கர் ஆகியோர் உடன் உள்ளனர்.