நாகர்கோவில் மே 9
குமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் அல் காலித் கனிம வளங்கள் ஏற்றி செல்லும் கனரக வாகனங்களை மத்திய மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தடை செய்ய வேண்டும் என கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:-
கன்னியாகுமரி மாவட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ராதாகிருஷ்ணனால் நாகர்கோவில் பார்வதிபுரத்திலும், மார்த்தாண்டம் பகுதியிலும் இரண்டு பாலங்கள் அமைக்கப்பட்டது. பாலங்கள் அமைக்கப்பட்ட போது இதனுடைய உறுதிப்பாட்டின் மீது மக்கள் சந்தேகப்பட்டார்கள் ஐந்து வருடங்கள் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்த பாலம்மானது தற்போது பழுதடைந்துள்ளது. பழுதடைவதற்கு முக்கிய காரணம் அதனை சரியாக பராமரிக்க மத்திய அரசு தவறிவிட்டது. இது ஒரு புறம் இருந்தாலும் இந்த மாவட்டத்தின் வழியாக கேரளாவுக்கு கனரக வாகனங்கள் மூலம் அளவுக்கு அதிகமாக பாரங்களை ஏற்றி செல்வதால் பாலம் பழுதடைந்துள்ளது. ஏற்கனவே கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் கனராக வாகனங்களுக்கு தடை விதித்து இருந்தும் கனரக வாகன முதலாளிகள் உயர் நீதிமன்றத்தை அணுகி நீதிமன்ற உத்தரவு வாங்கி வந்து கனரக வாகனங்களில் அதிகமான பாரங்களை ஏற்றி அதானி துறைமுகத்திற்கு கொண்டு செல்கிறார்கள். இந்த பாலம் பழுதடைவதற்கு முக்கிய காரணம் கனரக வாகனங்களில் ஏற்றக்கூடிய பாரம் மட்டுமே ஆதலால் சிறப்பு விதியின் மூலம் இந்த பாலங்கள் தாக்குப் பிடிக்காது என்று மாவட்ட ஆட்சியாளர் உடனடியாக ஆணை வழங்கி அந்த பாலம் வழியாக 30 டன்னுக்கு மேல் எந்த வாகனமும் சொல்ல க்கூடாது என்று அரசாணை வெளியிட்டு குமரி மாவட்டத்தில் உள்ள மக்களை உயிர் பலி வாங்கும் கனரக வாகனங்களை தடை செய்து நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டம் பாலங்களை பாதுகாக்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக் கொள்வதுடன் மத்திய அரசானது உடனடியாக இந்த இரண்டு பாலங்களில் பராமரிப்பு பணியை தமிழக அரசுக்கு வழங்க வேண்டும் என்று நாகர்கோவில் மாநகர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறோம் இல்லையென்றால் பெருந்திரல் மக்களை திரட்டி நாகர்கோவில் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முற்றுகையிடப்படும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.