நாகர்கோவில் பிப்ரவரி 13
குமரி மாவட்டம் மாத்தூர் தொட்டிப் பாலத்தின் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டிருந்த பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களின் உருவம் உதித்த கல்வெட்டை உடைத்து சேதப்படுத்திய சமூக விரோதிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி
மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் மண்டல செயலாளர் பெல்வின்ஜோ தலைமையில் மனு வழங்கப்பட்டது.
உடன் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் மரிய ஜெனிபர், மாவட்ட தலைவர் தீபக் சாலோமன் உட்பட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.