பரமக்குடி,மே.22 :
பரமக்குடியில் இராமநாதபுரம் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் “என் கல்லூரி கனவு” உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடந்தது.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி கீழ முஸ்லீம் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் உயர்கல்வி சேர்வதற்காக வழி காட்டுதல் நிகழ்ச்சி “என் கல்லூரி கனவு”நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்(பொ) மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜூலு தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி வைத்து துவக்கி வைத்தார். முன்னதாக,மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் பழனிக்குமார் அனைவரையும் வரவேற்றார்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்(பொ) பிரிண்ஸ் ஆரோக்கிய ராஜ், மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) சுதாகர், தாட்கோ மேலாளர் தியாகராஜன், பரமக்குடி வட்டாட்சியர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில்
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் (பொ) மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜூலு மாணவ – மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டல் கையேடுகளை வழங்கி பேசினார்.தொடர்ந்து மாணவர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு துறையினரின் வழிகாட்டுதல் உரை நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.பரமக்குடி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தனி வட்டாட்சியர் காதர் முகைதீன் நன்றி கூறினார்.