திண்டுக்கல் ஏப் 23
திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட மவுன்ஸ்புரத்தில் ஞானசேகரன் என்ற வயதான முதியவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார். இது சம்பந்தமாக நகர் வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது.
இந்த வழக்கு சம்பந்தமாக மேற்கண்ட குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவின்படி, திண்டுக்கல் நகர் உட்கோட்ட காவல் துனை கண்காணிப்பாளர் கார்த்திக் மேற்பார்வையில், நகர் வடக்கு காவல் ஆய்வாளர் (பொறுப்பு ) வினோதா, சார்பு ஆய்வாளர் அருண்குமார், நகர் உட்கோட்ட குற்றப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர்கள் வீரபாண்டியன்,ஜார்ஜ் எட்வர்ட், தலைமை காவலர்கள் ராதாகிருஷ்ணன்,முகமது அலி, விசுவாசம், சக்திவேல், மற்றும் CCTV தலைமை காவலர்கள் ஜான் சுரேஷ்குமார், செல்வி, ஆகியோர் இணைந்து பல்வேறு CCTV பதிவுகளை ஆய்வு செய்ததில் மேற்கண்ட குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது திண்டுக்கல் லைன் தெருவை சேர்ந்த கண்ணன் மகன்
(ராஜன் @ டோணி, திண்டுக்கல். பொன்னிமாந்துறையை சேர்ந்த நாகப்பன் மகன்
ரஞ்சித்குமார், லைன் தெருவை சேர்ந்த துரைச்சாமி மகன் விஜய் பிரகாஷ். என்பது தெரியவந்தது.
பின்னர் மேற்கண்ட குற்றவாளிகளை திண்டுக்கல் சைபர் கிரைம் காவலர்கள் உதவியுடன் கைது செய்து விசாரணை செய்ததில் மேற்கண்ட குற்ற சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர்.பின்னர் அவர்களிடமிருந்து கொலைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது.பின்னர் மூன்று பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.