அருமனை, பிப்-2
அருமனை காவல் நிலைய இன்ஸ்பெக்டராக ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கங்கைநாத பாண்டியன் (45) என்பவர் கடந்த ஒரு ஆண்டாக பணியாற்றி வந்தார். இவரை தற்போது ஆயுதப்படைக்கு அதிரடியாக மாற்றம் செய்து மாவட்ட எஸ்பி ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அருமனை சுற்றுவட்டாரப் பகுதிகளில் அனுமதி இன்றி செயல்படும் பன்றி பண்ணைகளை அகற்றுவதற்கும் மற்றும் சோதனை சாவடிகள் வழியாக கழிவுகளை கொண்டு வரும் வாகனங்களை பரிசோதிக்காமல் அனுப்பியது தொடர்பான பிரச்சனைகள் சமீபகாலமாக அதிக தாக்கத்தை ஏற்படுத்தின. இதனால் பொதுமக்கள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதன் காரணமாக அருமனை . இன்ஸ்பெக்டர் கங்கைநாத பாண்டியன் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டு இருக்கலாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.