தருமபுரி அமலா நர்சரி அண்ட் பிரைமரி பள்ளியில் நடைபெற்ற UNIQUE CONCEPT MAX அபாகஸ் பயிற்சி பள்ளி நடத்திய மாநில அளவிலான MULTI TALENT SHOW-2025
அபாகஸ் போட்டி தேர்வில் மாநில அளவில் தருமபுரி அமலா நர்சரி அண்ட் பிரைமரி பள்ளியில் 4-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி பிரகல்யா மாநில அளவில் முதலியிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இந்நிகழ்வில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் ,
வெற்றிவேல், மற்றும் அபாகஸ் பயிற்சி பள்ளியின் நிறுவனர் நந்தினி,அழகர் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கோப்பையும், பரிசுகளையும் வழங்கி பாராட்டுகளை தெரிவித்து கொண்டனர். தமிழ்நாடு முழுவதிலும் இருந்து வருகை தந்து கலந்து கொண்ட மாணவ, மாணவியர்கள், பெற்றொர்கள், பள்ளி முதல்வர் , பொதுமக்கள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்துகொண்டனர்.