நாகர்கோவில், டிச. 6 –
த.வெ.க. வின் கொள்கை தலைவர் கர்மவீரர் காமராஜர் அவர்களை பற்றி இழிவான தகவலை பரப்பி கொண்டிருக்கும் நெறிமுறையாளர் முக்தார் அவர்களை கடுமையாக கண்டிக்கிறோம். தமிழக அரசு அவர் மீது வழக்கு தொடர்ந்து கைது செய்ய வேண்டும்.
தற்போது விவாத பொருளாக மாறி இருக்கும் நெறியாளர் முக்தார் அவர்களுக்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில் தமிழக வெற்றி கழகம் குமரி கிழக்கு மாவட்ட நிர்வாகி ரூபன் கூறியதாவது:- எல்லோரும் எல்லோரையும் விமர்சிக்கும் உரிமை உண்டு. ஆனால் அது ஒரு வரையறைக்குள் நிற்க வேண்டும். ஆனால் தற்போது ஒரு சில ஊடகவாதிகள் என்று கூறுபவர்கள் ஊடக பேட்டிகளில் தலைவராக வாழ்ந்து புனிதராக இருந்தவர்கள். மற்றும் வரலாறு படைத்தவர்களின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாகவும் சாதிய மற்றும் மத சிந்தனைகளை உருவாக்கி மக்களுக்குள் சாதிய மத மோதலை ஏற்படுத்தும் விதமாகவும் ஒரு சில கட்சிகளின் பின்னோட்டத்தில் செயல்படுவது போலவும் பேசி வருகின்றனர்.
இதில் முக்தார் என்ற நெறியாளர் தற்போது காமராஜர் காலத்தில் அவரது சொந்த சாதியை சார்ந்தவர்களுக்கு அணைக்கட்ட வசதி ஏற்படுத்தி கொடுத்தார் சிவகாசியில் கள்ள நோட்டு அடிப்பதை கண்டு கொள்ளவில்லை. அதே போன்று முதல் ஊழல்வாதி காமராஜர் என்றெல்லாம் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக குமரி மாவட்டத்தில் மட்டுமின்றி தமிழ்நாட்டில் பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் காவல் நிலையங்களிலும் ஆட்சியர் அலுவலகங்களிலும் மனு கொடுத்துள்ளனர். அதில் இதைப் போன்ற நெறியாளர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் என்ன வேண்டுமென்றாலும் பேசலாம் என்று கூறும் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களையும் தடை செய்ய வேண்டும்.
அது மட்டும் இன்றி காமராஜர் பெயருக்கு களங்கம் விளைவித்தல் சாதிய மத மோதல்களுக்கு வித்திட்டல் என போட்டி அடிப்படையில் வழக்கு பதிவு செய்ய வேண்டும். தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை தலைவர் காமராஜர் ஐயா அவர்களை அவமதிக்கும் விதமாக நடந்து கொள்ளும் நெறியாளர் முத்தார் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயக்கம் காட்டுவது ஏன் பின்புலத்தில் ஆளும் கட்சியினர் துணை நிற்கின்றார்களோ என்ற ஐயப்பாடு ஏற்படுகிறது என்று கருதுகிறோம் என அவர் தெரிவித்தார்.



