தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (13.02.2025) தேனி மாவட்டத்தின் புதிய ஆட்சித்தலைவராக திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., பொறுப்பேற்றுக் கொண்டார்கள்.
பின்னர் செய்தியாளர் சந்திப்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது,
நான் இன்று தேனி மாவட்ட ஆட்சித்தலைவராக பொறுப்பேற்று கொண்டுள்ளேன். எனது சொந்த ஊர் உத்திரப்பிரதேசம் மாநிலம் கான்பூர். 2016-ஆம் ஆண்டு இந்திய குடிமைப்பணிகள் தேர்வில் தேர்ச்சி பெற்று, சேலம் மாநகராட்சி ஆணையாளராகவும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் கூடுதல் ஆட்சியராகவும் பணிபுரிந்துள்ளேன்.
அரசின் திட்டங்கள் பொதுமக்களை சென்றடைவதில் ஏற்படும் இடைவெளியை குறைத்தல், பழங்குடியினர் முன்னேற்றம் போன்றவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அரசின் நலத்திட்டங்கள் உரிய பயனாளிகளை சென்றடைவதும் உறுதி செய்யப்படும்.
பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து, அதற்கு உடனடி தீர்வு கிடைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் எப்பொழுது வேண்டுமானாலும் தன்னை அலுவலகத்தில் சந்திக்கலாம். மேலும், அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைத்து பணிபுரிய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., தெரிவித்தார்கள்.
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தேனி.