நாகர்கோவில் அக் 28
கன்னியாகுமரி மாவட்டம் மாதவலாயம் எஸ்டிபிஐ அலுவலகத்தில் வைத்து விமன் இந்தியா மூவ்மெண்ட்-ன் மாவட்ட செயற்குழு கூட்டம்
மாவட்டத்தலைவர் மாஜிதா ஷா தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக எஸ்டிபிஐ
கட்சியின் மாவட்டத் தலைவர் சத்தார் அலி, விமன் இந்தியா மூவ்மெண்ட் -ன் மாநில செயலாளர் ரஹ்மத் நிஷா ஆகியோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பஸ்ரியா சாகுல் வரவேற்புரை ஆற்றினார். பெண்களின் பாதுகாப்பு சமூகத்தின் பொறுப்பு என்ற போஸ்டர் வெளியிடப்பட்டது. அக்டோபர் 2 முதல் டிசம்பர் 2 வரை பெண்களின் பாதுகாப்பு சமூகத்தின் பொறுப்பு என்ற தலைப்பில் அகில இந்திய பிரச்சாரம் தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அக்டோபர் 2 முதல் நவம்பர் 10 வரை அனைத்து மாவட்டங்களிலும் நோட்டீஸ் மற்றும் போஸ்டர் விநியோகம் செய்ய வேண்டும் என்றும் கருத்தரங்கம் நடத்த வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாதவலாயம் நகரத் தலைவர் பெனாசிர் மைதீன் ,நகரச் செயலாளர் ஜுனைதா ரபீக் கலந்து கொண்டார்கள்.நிகழ்ச்சியின் இறுதியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அனீஸ் இப்ராஹீம் நன்றியுரையாற்றினார்.