காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகனிடம் இலுப்பப்பட்டு ஊராட்சி வார்டு உறுப்பினர் கற்பகம் ஆல்பர்ட் தலைமையில் பத்திற்க்கும் மேற்பட்ட கிராம மக்கள்
தங்கள் ஊரில் 2.5 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு வீட்டுமனை வழங்க வேண்டி ஆட்சியரிடம்
கோரிக்கை மனு வழங்கினர்.
அந்த மனுவில்
தாங்கள் மேற்கண்ட முகவரியில் சுமார் 40 ஆண்டு காலமான வசித்து வருவதாகவும் தினக்கூலி அடிப்படையில் வசிப்பதாகவும் போதிய வருமானம் கிடையாது, அரசுத் துறையில் பணிபுரிய வில்லை என்றும்,சொந்த வீடு இல்லாத காரணத்தால் வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும்
இது வரை சொந்த இடமின்றி வறுமைக்கோட்டின் கீழ் வசிக்கும் தங்களுக்கு தமிழக அரசால் இலவச வீடு வழங்கும் படி குறிப்பிட்டுள்ளனர்.
மேலும்
தற்போது தங்கள் கிராமத்தில் (இலுப்பட்டு) நத்தம் புறம் போக்கு 2.50 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த இடத்தில் தேர்வு செய்து அனைவருக்கும் வீட்டு மனை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.