ஈரோடு நவ 28
தமிழ்நாடு அருந்ததியர் அரசியல் அதிகார உரிமை மீட்பு கூட்டியக்கத்தின் சார்பில் ஈரோடு சூரம்பட்டி நால் ரோட்டில் கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழின்பன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அருந்ததியர் முன்னேற்ற பேரவை,
திராவிடர் புரட்சி கழகம்
அருந்தமிழ் ஆசிரியர் கூட்டமைப்பு
குறிஞ்சி குயிலி பெண்கள் பாசறை
அம்பேத்கர் இளைஞர் மன்றம்
தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர் நல உரிமை இயக்கம்
அருந்ததியர் விடுதலை கழகம்
தமிழ்நாடு அருந்ததியர் மக்கள் வளர்ச்சி பேரவை
திராவிட எழுச்சி பேரவை
விடுதலை வேங்கைகள் கட்சி…
உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட அமைப்புகளுடன் அருந்ததியர் உணர்வாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் 2
நாடாளுமன்றம் மற்றும் 16சட்டமன்ற தொகுதிகள், உள்ளாட்சியில் அரசியல் அதிகாரம் பெறுவது குறித்தும் அருந்ததியர் நலவாரியம் ஆறு சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட அருந்ததிய வளர்ச்சிக்கு உதவிடும் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அதன் அடிப்படையில் அனைத்து தலைவர்களும் செயல்படுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது… மேலும் 20க்கும் மேற்பட்ட அமைப்பின் தலைவர்கள் இக்கூட்டத்தில் செய்யப்பட்டுள்ள முடிவின்படி செயல்படுவதென உறுதி அளித்துள்ளனர்.
இதில் தகுதி உள்ள அனைவருக்கும் தாட்கோ கடன் உதவி வழங்க வேண்டும் கட்டணம் இல்லா கல்வி சேவை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



