நாகர்கோவில் பிப் 13
குமரி மாவட்டம் நாகர்கோவில் தெ.தி.இந்துக் கல்லூரி முன்பு மூட்டா மற்றும் ஏ யூ டி-வை சேர்ந்த பேராசிரியர்கள் இணைந்து கல்லூரி வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு உதவி பெறும் கல்லூரி பேராசிரியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இணைப்பேராசிரியர் பணி மேம்பாடு ஊதியம் உள்ளிட்ட அனைத்து பணி மேம்பாடு ஊதியம் மற்றும் நிலுவைத் தொகையினை உடனடியாக வழங்கிடக் கோரியும் மற்றும் M.Phil, Ph.D ஊக்க ஊதிய தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தி மூட்டா மற்றும் ஏ யூ டி இணைந்து மாநில முழுவதும் அனைத்து கல்லூரிகளிலும் 12-ம் தேதி கல்லூரி வாயில் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக நாகர்கோவில், தெ.தி.இந்துக் கல்லூரி முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலார் மகேஷ், தலைமை ஏற்றார், மூட்டா மத்திய பொருளாளர்.ராஜ ஜெய சேகர் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். 100க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று இருந்தனர். முடிவில் கிளை பொருளாளர். சுப்பையா நன்றி தெரிவித்தார்.