தஞ்சாவூர் ஜன 10,
தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் கடந்த 4 மாதங்களில் நடமாடும் கால்நடை மருத்துவ ஆம்புலன்ஸ் மூலம் 23 ஆயிரத்து 851 ஆடு மாடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள் ள செய்தி குறிப்பில் கூறியிருப் பதாவது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் தொலைதூர கிராமங் களில் உள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் நடமாடும் கால்நடை மருத்துவ ஆம்புலன்ஸ் வாகனம் கலந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் 7 நடமாடும் கால்நடை மருத்துவ ஆம்புலன்ஸ் வாகனங்கள் செயல்பாட்டில் உள்ளது
இந்த வாகனங்களில் ஒரு கால்நடை மருத்துவர், உதவியாளர் டிரைவர் என 3பேர்கள் இருப்பார் கள் .இந்த வாகனங்கள் தஞ்சாவூர் பூதலூர் பாப்பாநாடு கும்பகோணம் வேப்பத்தூர் பட்டுக்கோட்டை பேராவூரணி ஆகிய 7 கால்நடை மருத்துவ நிலையங்களை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது இதில் தடுப்பூசி மருந்துகள் செயற்கை முறை கருவூட்டல் குச்சிகள் குளிர்சாதன பெட்டி வசதிகள் உள்ளன
இதன் நோக்கம் தொலைதூர கிராமங்களில் உள்ள மாடுகள் ஆடுகள், நாய்கள் கோழிகள் கால்நடைகளின் இருப்பிடங் களுக்கு சென்று சிகிச்சை அளிப்பதாகும் .இந்த வாகனம் காலை 8 மணி முதல் 11 மணி வரை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை இரு கிராம ஊராட்சிகளில் முகாம்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது
கடந்த 4 மாதங்களில் நடமாடும் ஆம்புலன்ஸ் மூலம் 23,851 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது .அவசர சிகிச்சைக்கு மதியம் 2 மணி முதல் 5: மணி வரை இலவச அழைப்பு என் 1962 மூலம் கால் சென்டருக்கு அழைப்பு விடுத்தால் அருகில் உள்ள ஆம்புலன்ஸ் கால்நடை டாக்டருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டு, கால்நடை உரிமையாளரின் இருப்பிடத்திற்கு சென்று சிகிச்சை அளிக்கப்படும் .
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது