கிருஷ்ணகிரி,மார்.21- தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் நடத்தும் கல்லூரி மாணவிகளுக்கான பேச்சு போட்டி வருகிற 26.3.2025 புதன்கிழமை எலத்தகிரி கரத்தான்பள்ளம் கொன்சாகா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பிதழை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் குமார் அவர்களிடம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு சிறுபான்மை ஆணையம் என்.அஸ்லம் ரஹ்மான் ஷெரீப், அழைப்பிதழ் வழங்கினார். நகர பொருப்பாளர் வேலுமணி, சிறுபான்மை துணை அமைப்பாளர்கள் ரியாஸ், ஆசிப்,பிர்தோஸ் கான்,ஜெயராஜ், நகர்மன்ற உறுப்பினர் ஜெயக்குமார் ,போண்டா ரியாஸ் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.



