சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், காட்டாம்பூர் ஊராட்சிக்குட்பட்ட கொளுஞ்சிபட்டி கிராம பகுதியில், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் சிறுபாசன கண்மாய்கள் புதுயிர் ஊட்டுதல் திட்டம் 2024-2025ன் கீழ் மருதன் கண்மாய் தூர்வாருதல் மற்றும் கரை பலப்படுத்துதல் பணியினை, கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், தலைமையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் கா.வானதி செயற்பொறியாளர் அனுராதா, முன்னாள் ஊராட்சி ஒன்றியக்
குழுத்தலைவர் சண்முகவடிவேல் மற்றும் விவசாயிகள் உட்பட கலந்து கொண்டனர்.



