பூதப்பாண்டி பிப் 9
குமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த தடிக்காரன் கோணம் இந்திரா நகரில் சந்தையின் அருகில் மக்கள் குடியிருபப்புக்கு மத்தியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இந்த ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையின் மருத்துவ கழிவுகளை கொட்டி எரிப்பதால் ஒருவித துர்நாற்றத்துடன், புகை வீசுவதால் மருத்துவமனையின் அருகாமையில் உள்ள மக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் உள்ள பொது மக்கள் மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவரிடம் புகார் அளித்துள்ளனர்.
அதற்கு மருத்துவர் மற்றும் துப்புரவு பணியாளர் ஆகியோர் மருத்துவ கழிவுகளை எரிக்க தான் முடியும் என அலட்சியமாக பதில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மருத்துவர் மற்றும் துப்புரவு பணியாளரின் அலட்சியமான பதிலைக் கேட்ட பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் தெரிவிக்கும் போது
இது போல் ஏற்கனவே பலமுறை நடைபெற்றுள்ளது அப்போதும் இது குறித்து பொதுமக்கள் புகார் அளித்தும் சுகாதாரத் துறையும், மாவட்ட நிர்வாகமும் கண்டுகொள்ளவில்லை மருத்துவ கழிவுகளை அரசின் வழிகாட்டு நெறிமுறையின் படி
சுகாதாரப் பராமரிப்பின் ஒரு முக்கிய பகுதியாகும். சுகாதாரப் பராமரிப்பு கழிவுகளை மோசமாக நிர்வகிப்பது சுகாதாரப் பணியாளர்கள், கழிவு கையாளுபவர்கள் மற்றும் சமூகத்தை தொற்றுகள், நச்சு விளைவுகள் மற்றும் காயங்கள் மற்றும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் அபாயங்களுக்கு ஆளாக்குகிறது.
மருத்துவ கழிவுகளை பாதுகாப்பாக அகற்ற, கழிவு மேலாண்மை விதிகளின்படி, மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு, மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறது.மருத்துவ கழிவுகள் பொது வெளியில், நீர்நிலைகளில் கொட்டப்படுவதையும், எரிப்பதையும் அரசு தடை செய்துள்ளது. கிருமிகள் கலந்த கழிவுகளும் காலாவதியாகும் மருந்துப் பொருள்களும் கழிவுகள் பட்டியலில் சேர்க்கப்படுகின்றன. “ட்ரீட்மெண்ட் பிளாண்ட்’டுகளில் “இன்சினரேட்டர்’, “மைக்ரோவேவ்ஸ்’ போன்ற எரிப்பான்கள் மூலம் உயர் வெப்பநிலையில் எரித்தல் போன்ற முறைகளைக் கையாண்டு மருத்துவக்கழிவுகள் அழிக்கப்படுகின்றன.மேலும் இதுபோன்று தவறு செய்யும்
சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் மீது நோய்த் தொற்று பரவும்படி அலட்சியமாகச் செயல்பட்டதாக இந்தியத் தண்டனைச் சட்டம் 270ன் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மேலும் இதுபோன்ற மருத்துவ கழிவு எரிப்பு சம்பவம் நடந்தால் பொதுமக்கள் ஒன்றிணைந்து மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என அவர் தெரிவித்தார்.