நாகர்கோவில், ஜூலை – 18,
நாகர்கோவில் மாநகராட்சியின் வலம்புரிவிளையில் அமைந்துள்ள திடக்கழிவு மேலாண்மை நுண் உரம் செயலாக்க மையத்தில் மேயர் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் ரெ.மகேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டு குப்பை வண்டிகள் மேல் தார்பாய் போட்டு மூடாமல் வண்டியை ஓட்டியவர்கள் மற்றும் சீருடை அணியாத ஒட்டுனர்களிடம் , இது போன்ற தவறுகளை செய்யக்கூடாது என்று அறிவுறுத்தி குப்பை வண்டிகளில் மேல் தார்பாய் போட்டு மூடி கொண்டு கொண்டு வர வேண்டும் என உத்தரவிட்டார். உடன் இராஜாக்கமங்கலம் ஒன்றிய பெருந்துணை தலைவர் சரவணன் மற்றும் பலர் இருந்தனர்.