ஸ்ரீவில்லிபுத்தூர், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில், இசிஇ துறை சார்பில், “மேட்லேப் மாணவர்கள் குழு’ துவக்கவிழா துணைத் தலைவர் முனைவர் எஸ்.சசி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.
துணைவேந்தர் முனைவர் எஸ்.நாராயணன், பதிவாளர் முனைவர் வி.வாசுதேவன். டீன்,முனைவர் பி. சிவ குமார், ஐஆர்- இயக்குநர் முனைவர் சுப்ரகாஷ், மற்றும் துறைத்தலைவர் முனைவர் ஏ.முத்து குமார், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
சிறப்பு விருந்தினர் , பெங்களூரு, டெரிட்டரி மேலாளர், அருள் செல்வம், மேட்லேப் மாணவர்கள் குழுவைக் தவக்கி வைத்து, குழுவின் முக்கியத்துவம் மற்றும் நன்மைகள் குறித்து உரையாற்றினார். மேலும்,”சுமார் 90,000 தொழிற்சாலைகள்,
தங்கள் பகுப்பாய்விற்கு மேட்லேப்பை பயன்படுத்துகின்றன
என்றார்.
மேத்ஒர்க்ஸ் ,மேலாளர்,தரிணி ராஜ், ஏஆர்ஆர் நிறுவன மேலாளர் கவுதம் ராஜ்மோகன், குழு செயல்பாடுகள் குறித்து பேசினர்.
முனைவர் ஜே.ஜோஸ்பின் செல் வரவேற்புரையாற்றி முனைவர். பி.பெருமா
ளுடன் ஒருங்கிணைத்து விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.
முனைவர் பென்னிலோ பெர்னாண்டஸ் நன்றி கூறினார்.