மதுரை அழகப்பன் நகரில் உள்ள அன்னை தெரசா மருத்துவ அறக்கட்டளை நிறுவனமும் மாநகரப் போக்குவரத்து காவல்துறையும் இணைந்து நடத்திய மாபெரும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி.
இந்த பேரணியை
அறக்கட்டளை நிறுவனரும் தின சங்கு உரிமை குரல் நாளிதழின் நிறுவனருமான டாக்டர். கண்ணன் தலைமையில் நகர் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் செல்வின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேரணியை துவக்கி வைத்தார்.
இந்த பேரணியானது கல்லூரியில் துவங்கி பழங்கானத்தம் ரவுண்டானா வரை சென்று நிறைவு பெற்றது. வழிநெடுகிலும் மாணவிகள் சாலை பாதுகாப்பு பதாகைகள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இதில் நகர் தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் பூர்ண கிருஷ்ணன் உதவி ஆய்வாளர் செல்வகுமார் மற்றும் சுப்பிரமணியபுரம் காவல் உதவி ஆய்வாளர்கள் லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் உட்பட காவலர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்