கிருஷ்ணகிரி,பிப்.7- கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மக்களுக்கு அநீதி இழைப்பதையும் கனிமவள கொள்ளையை கண்டு கொள்ளாத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் கண்டனம் ஆர்ப்பாட்டம் கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட செயலாளர் அ. மாதேஷ் தலைமையில் தமிழக அரசை கண்டித்து கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர் கணபதி வரவேற்றார், ஒன்றிய செயலாளர் ஆலப்பட்டி ரமேஷ், சூளகிரி ஒன்றிய செயலாளர் முனியப்பன், இடிப்பள்ளி கிருஷ்ணன், இளம் சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் ஜெய்சங்கர், சிவக்குமார், தொகுதி துணை செயலாளர் முரளி, கார்த்திக், மாவட்ட அமைப்பாளர் குப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் புலி (எ)ராஜேஷ்,ஒன்றிய பொருளாளர் பலராமன், மகளிர் அணி ஒன்றிய செயலாளர் செல்வி மாதேஷ், கோபி, வெங்கடேஷ், மூர்த்தி, பிரேம், தங்கதுரை, சுரேஷ், முனிராஜ், மாது,நந்தன் ,சக்தி வளவன்,பெருமாள், தனுஷ், ஜே ஆர் பாபு, ஏஜெஸ், சையத் காதர்,மார்கோ,அப்சல்,யூனிஸ்கான் ,அமித் கான்,அஜ்மல்,டாக்டர் ஜெமால்கான்,வினோத், பவுல்,சோக்காடி ராஜன், வரதராஜ் சிலம்பரசன் ஜெயக்குமார் மூர்த்தி வினோத், மகளிர் அணி முருகம்மாள், லதா, தேவி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆளூர் சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ் கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை வசதி, குடிநீர் வசதி, பட்டா, வருவாய் சான்றிதழ்கள் கேட்டுக் பல மாதங்களாக பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் மனு வழங்கி போராடி . மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான கிரானைட் கற்கள் உள்ளிட்ட கனிம வளங்கள் கொள்ளையடிக்க பட்டு வருகிறது. இது குறித்து அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டுமில்ல தமிழகம் முழுவதும் இது போன்ற பொது மக்களின் அடிப்படை பிரச்சினைகள் அதிகளவில் உள்ளன. பொது மக்கள் வழங்கும் மனுக்களை அதிகாரிகள் கிடப்பில் போடுவதாக கூறினார்.
மேலும்., தற்போதைய சூழ்நிலையில் 2025 ஆம் ஆண்டில் கூட பொது மக்களின் அடிப்படை பிரச்சனையான பட்டா கேட்டு போராடும் நிலை உள்ளது. இந்த நிலையினை மாற்றி தமிழகம் முழுவதும் உள்ள பொது மக்களின் நீண்ட கால கோரிக்கையான அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். இந்த கோரிக்கைகளுக்காக தொடர்ந்து போராடுவோம் என்று கூறினார்.
உடன் தலைமை நிலைய செயலாளர் தகடூர் தமிழ்செல்வன் பேசியதாவது இதை குறித்து விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன்னிடம் பேசுவதாக கூறினார்.2000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் கலந்துக் கொண்டனர். இறுதியாக ஒன்றிய செயலாளர் ஆலப்பட்டி ரமேஷ் நன்றி கூறினார்.