தருமபுரியில் தேசிய முற்போக்கு திராவிட கழக சார்பில் கழகப் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் ஆணைக்கிணங்க மின்கட்டண உயர்வு, ரேஷன் கடைகளில் பருப்பு பாமாயில் வழங்குவதில்தில்லு முல்லு, காவிரி நீர் பாசனத்தை திறக்க மறுத்த தமிழக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வரவேற்புரை பி, குமார் தருமபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னிலை பி.விஜய சங்கர் தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர், கண்டன சிறப்புரை டாக்டர். வி, இளங்கோவன் கழக அவைத் தலைவர், ஏ.மாரிமுத்து, டி. கே. விஜய் வெங்கடேஷ்,பி.கே.குமார், சி.என்.தங்கவேல், கே. ஆர். உதயகுமார், சி. சீனிவாசன், பி. ராமச்சந்திரன், நன்றி உரை எஸ்.தேவதேவன் நகரக் கழகச் செயலாளர் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் பேசியதாவது மின் கட்டண உயர்வு, ரேஷன் கடைகளில்பருப்பு, பாமாயில் அரசு நிறுத்த முயற்சிப்பதாக இதனை கைவிடும் படியும், மின் கட்டண உயர்வை குறைக்க வலியுறுத்தியும் அவர்கள் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி கழக நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.



