நீலகிரி. மார்ச்.13.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பொக்காபுரம் மாரியம்மன் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு பல்லாயிரம் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருள் பெற்று சென்றனர். கூடலூர் மசினகுடி அருகே அமைந்துள்ள கோயில் திருவிழாவில் ஆண்டுதோறும் தேர் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்து சமய அறநிலையத்துறை சோலூர் பகுதி மக்கள் மற்றும் பொக்காபுரம் பகுதியில் உள்ள பழங்குடியின மக்களால் விழா நடத்தப்படுகிறது. இதனை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் அண்டை மாநிலமான கர்நாடகா, கேரளா போன்ற பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம் கோயில் திருவிழா ஐந்து நாட்கள் நடந்தாலும் கங்கை பூஜை நடக்கும் நாள் மற்றும் தேர் திருவிழா நடக்கும் நாளில் பல்லாயிர பக்தர்கள் கூடுவது வழக்கம். இதனால் திருவிழாவிற்கு செல்ல பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்து கழகம் சார்பில் ஊட்டி, கோத்தகிரி, கூடலூர் பகுதிகளில் இருந்து ஆண்டு தோறும் சிறப்பு விழா பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
ஊட்டி அருகே உள்ள சோலூர் பேரூராட்சி மூலம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் தண்ணீர் இதர அடிப்படை வசதிகளும் செய்து தரப்படுகிறது. இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த ஏழாம் தேதி கொடியேற்றத்துடன் மற்றும் சிறப்பு பூஜைகளுடன் துவங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு திருவிளக்கு ஏற்றுதல், அபிஷேகம் மற்றும் அலங்கார நிகழ்ச்சிகள் ஆகியவை நடக்கும் நாட்களில் சிறப்பு பூஜைகளும் கங்கை பூஜையும் நடந்தது. இதனை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனுக்கு கரகம் எடுத்து வந்தனர். மசினகுடி, வாழைத்தோட்டம், சிங்கார போன்ற பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கரகம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக நிகழ்ச்சி நடந்தது. இதில் பல்லாயிரம் பக்தர்கள் கலந்து கொண்டனர். நேற்று முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடந்த்து. பொக்காபுரம் மாரியம்மன் கோயில் திருவிழாவிற்காக சமவெளிப் பகுதிகள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.
மாரியம்மன் கோயில் தேரோட்டம்

Leave a comment