நாகர்கோவில் ஜூலை 7
இந்திய கூட்டணி கட்சியின் குமரி மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளராக களம் கண்டு மாபெரும் வெற்றி வாகை சூடி இந்தியாவின் தலைநகரில் நாடாளுமன்றத்தின் உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்ட விஜய் வசந்த் எம் பி தனது சொந்த ஊரான குமரி மாவட்டத்திற்கு வருகை தந்தார். அவருக்கு இந்தியா கூட்டணி சார்பில் தோழமை கட்சி தலைவர்கள் ஒன்றிணைந்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
தன்னை தேர்ந்தெடுத்த குமரி மாவட்டம் மக்களுக்காக தொடர்ந்து பாடுபடுவேன், குமரி மக்களின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிப்பேன் என உறுதியளித்த விஜய் வசந்த் வாக்களித்த அனைவருக்கும் நன்றியினையும் தெரிவித்துக் கொண்டார். தொடர்ந்து வெற்றி கொண்டாட்டங்களில் கலந்து கொண்ட அவர் மண்டைக்காடு அருள்மிகு பகவதிஅம்மன் திருக்கோவில் நடைபெற்ற சிறப்பு பூஜையிலும் கலந்து கொண்டார். அவருடன் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகைகத்பட், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோருடன் பக்தர்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவர் நவீன்குமார், மண்டைக்காடு பேருர் காங்கிரஸ் தலைவர் சுந்தர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் அரோக்கியராஜன், ஐஎன்டியூசி கிழக்கு மாவட்ட தலைவர் டாக்டர் சிவக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.