சென்னை, ஜன- 03, தமிழ்நாடு மாடல்ஸ் அசோசியேஷன் சார்பில் ” மேன் ஆஃப் தமிழ்நாடு”
போட்டி சென்னை நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி வளாகத்தில் நடைபெற்றது.
இதில் பாரம்பரியச் சுற்று, பிட்னஸ் சுற்று, கார்ப்பரேட் நடை, கேள்வி பதில் என மூன்று பிரிவுகளாக நடந்த இந்த நிகழ்ச்சியில் 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் 40 பேர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர்.
தமிழகத்தில் முதல் முறையாக நடந்த இந்த ஆடவர் அழகுப் போட்டியில் மறைந்த விஜயகாந்த் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை “மேன் ஆஃப் தமிழ்நாடு ” மற்றும் மாடல்ஸ் அசோசியேஷன் தலைவர் வினோத் ஒருங்கிணைத்தார். இதில் வெற்றி பெற்ற நஸ்ருதீன், மனோஜ் அகில், ஆனந்த கிருஷ்ணன் ஆகியோர்
பிலிப்பைன்ஸ், துபாய்,மலேசியா, வியட்நாம் ஆகிய நாடுகளில் நடக்கும் சர்வதேச ஆடவர் அழகு போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா, தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர் டாக்டர் எம்.செல்வராஜ், டெர்பி ஜீன்ஸ் தலைமை செயல் அலுவலர் விஜய் கபூர், 2024 ” மிஸ்டர் இண்டியா “முஷ்தாக், இளம் தொழில்முனைவோர் கூட்டமைப்பு மாநில தலைவர் ஆனந்த், நடிகைகள் செல்வி.ஷகிலா, செல்வி.வர்ஷினி, அனுரேயா ராமன், வெண்மதி, நடிகர்கள் மேத்யூ வர்கீஸ், அசோக் குமார், திலீப் குமார், பிரதீப்,மக்கள் தொடர்பு அலுவலர் சக்தி சரவணன், பிக்பாஸ் பிரபலம் நிரூப் நந்தகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.