தஞ்சாவூர் பிப்.28.
தஞ்சாவூர் பெரிய கோவிலில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோயில்களிலும் மகா சிவராத்திரி விழா விமர்சை யாக கொண்டாடப்பட்டது.
தஞ்சாவூர் பெரிய கோவிலில் உள்ள பெருவுடையார் ,பெரிய நாயகி அம்மனுக்கு இரவு 10 மணி நள்ளிரவு 12:30 மணி அதிகாலை 2 மணி 4 மணி என நான்கு கால அபிஷேகங்கள் நடந்தன
தஞ்சாவூர் பெரிய கோவிலை சுற்றி பக்தர்கள் கூட்டம் அலை மோதியது .போக்குவரத்து பாதிக்கப்பட்டது .சிவராத்திரி விழாவை ஒட்டி பெரிய கோவில் அருகே உள்ள பெத்த அண்ணன் கலையரங்க வளாகத்தில் அரண்மனை தேவஸ்தானம் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன
கலை நிகழ்ச்சியை மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, சதய விழா தலைவர் செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர் .கலை விழாவில் மேயர் சண். ராமநாதன், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்சிலே , உதவி ஆணையர் கவிதா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்
தொடர்ந்து காலை 6:00 மணி வரை பரதநாட்டியம் பக்தி இசை, நாதலைய சங்கமம் ,பட்டிமன்றம் கிராமிய நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.