கிருஷ்ணகிரி. ஏப்.7- கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் மத்தூர் அருகே உள்ள சோனாரஹள்ளி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகா முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் விழா இந்து மக்கள் கட்சி தெய்வீக பேரவை மாநில தலைவர் அசோக் ஜி தலைமையில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த பூஜைக்கு மத்தூர் செட்டியார்கள் தலைமையில் மேல தாளத்துடன் தட்டுவரிசை கொண்டுவரப்பட்டு விநாயகருக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த செட்டியார், வன்னிய கவுண்டர்கள் மூப்பர்கள் ஓட்டப்பட்டு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சந்தோஷ் குமார் உள்ளிட்ட 2000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் நன்கொடை வழங்கியவர்களுக்கு இந்து மக்கள் கட்சி தெய்வீக பேரவை மாநில தலைவர் அசோக் ஜி பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் கமலநாதன், டி. பாலு, பைனான்ஸ் பழனி, மூர்த்தி, சரவணன், ஜெய்சங்கர், இளவரசு, சேகர், மாதவராஜ், இறையருள், வியாபாரி பழனி ஆகியோர் செய்து இருந்தனர்.



