மதுரை டிசம்பர் 8,
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அஷ்டமி பிரதட்சணம் திருவிழா
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் சொக்கநாதப் பெருமானே பல்வேறு அவதாரமெடுத்து 64 திருவிளையாடல்கள் புரிந்த புரதானமான புண்ணிய ஸ்தலமாகும்.
இத்திருக்கோயிலில் மார்கழி மாதத்தில் வருகின்ற தேய்பிறை அஷ்டமி திதியே அஷ்டமி பிரதட்சணம் ஆகும். அந்நாளில் அருள்மிகு மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேசுவரர் ரிஷப வாகனத்தில் சட்டத்தேரில் வெளி வீதிகளில் உலா வருவார்கள். அருள்மிரு மீனாட்சி அம்மன் எழுந்தருளும் தேரினைப் பெண்கள் வடம்பிடித்து இழுத்து வருவது இவ்விழாவின் சிறப்பு அம்சம்.1434ஆம் பசலி அஷ்டமி பிரதட்சணம் சுவாமி புறப்பாடு வருகின்ற டிசம்பர் 23 ஆம் தேதி சிறப்பாக நடைபெறவுள்ளது. அருள்மிகு மீனாட்சி அம்மன் அருள்மிகு சுந்தரேசுவரர் சுவாமி சப்பரங்கள் வருகின்ற டிசம்பர் 23 ஆம் தேதியன்று காலை 5 மணிக்கு இத்திருக்கோயிலிலிருந்து புறப்பாடாகி வடக்கு நோக்கி யானைக்கல், வடக்கு வெளிவீதி கீழ வெளிவீதி, தெற்கு வெளிவீதி, திருப்பரங்குன்றம் சாலை வழியாக மேலவெளி வீதி குட்ஷெட் தெரு நாயக்கர் புதுத்தெரு வக்கில் புதுத்தெரு, கீழமாரட் வீதி, காமராசர் சாலை, விளக்குத்தூண் வழியாக கீழமாசி வீதி தேரடி வந்து சேத்தியாவார்கள் என்று கோவில் நிர்வாக செய்தி குறிப்பில் இணை ஆணையர், செயல் அலுவலர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.