மதுரை அக்டோபர் 2,
மதுரை மருத்துவக்கல்லூரி தேர்வு – டீன் வாழ்த்து
தமிழ் நாடு டாக்டர் எம் ஜி ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 2023-24 கல்வி ஆண்டிற்கான
சிறந்த இளங்கலை செவிலிய கல்லூரியாக செவிலியர் கல்லூரி, மதுரை மருத்துவக் கல்லூரி தேர்வு செய்யப்பட்டது. பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில்
தமிழ்நாடு மக்கள் நல வாழ்வு அமைச்சர் ம.சுப்பிரமணியன் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். மருத்துவ கல்வி இயக்குநர் மருத்துவர் சங்குமணி உடனிருந்தார். சிறந்த கல்லூரியாக தேர்ந்து எடுக்கப்பட்ட செவிலியர் கல்லூரி முதல்வர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை, மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) மருத்துவர் செல்வராணி வெகுவாக பாராட்டினார்