மதுரை
கோசாகுலம்
சிஇ.ஓ.ஏ.கல்விக் குழுமத்தின் நிறுவனர் முனைவர் இராசா கிளைமாக்சு கணிதத்தில்
புதிய தேற்றங்களைக் கண்டுபிடித்து உலக அளவில் சாதனை படைத்துள்ளார்.
இதற்கான செய்தியாளர்கள் சந்திப்பு பள்ளி விழா அரங்கில்
இப்பள்ளி சேர்மன் சாமி, தலைமையில்
வைஸ் சேர்மன்
சுந்தரபாண்டியன் முன்னிலையில் நடைபெற்றது.
மதுரையில் பள்ளி மற்றும் கல்லூரிகளை சிறப்பாக நடத்தி வரும் சிஇ.ஓ.ஏ. கல்விக் குழுமத்தின் நிறுவனர் முனைவர் இராசா கிளைமாக்சு,
ஒரு சிறந்த கல்வியாளர். ஓய்வு பெற்ற சுங்கதுறை அதிகாரியாகிய இவர், தமிழில் புலமை பெற்றவர். என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இவர் கணிதத்தில் அதிலும் குறிப்பாக வடிவியலில் (Geometry) பல புதிய தேற்றங்களைக் கண்டுபிடித்து உலக அளவில் கணித அறிஞர்களிடையே புகழ் பெற்று வருகிறார். இதுவரை பல இந்திய மற்றும் பன்னாட்டு மாநாடுகளில் (கோவா டெல்லி கொச்சின் புனே, திருப்பதி மற்றும் பிலிப்பைன்ஸ்) ஆகிய இடங்களில் பங்கு பெற்று பல விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்றவர்.
மேலும் உலகக் கணிதக்கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகம் (AIMER) என்ற அமைப்பு இந்த ஆண்டு ஏகலைவன் என்னும் விருதினை வழங்கி இவரைப் பெருமைப்படுத்தியது.
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரண்டாம் வாரத்தில் இத்தாலியில் நடைபெற்ற உலகக் கணித மாநாட்டிற்கு இவர் அழைக்கப்பட்டிருந்தார். அம்மாநாட்டில் தாம் கண்டுபிடித்த பன்னிரண்டு புள்ளி வட்டம் என்ற புதிய வடிவியல் தேற்றத்தை அறிஞர்கள் நடுவில் அரங்கேற்றுவதற்காக அழைக்கப்பட்டிருந்தார்.
அந்த வகையில்
1822 ஆண்டில் ஜெர்மனியைச் சேர்ந்த ஃபோயர்பாக் (Feuerbach) என்பவர் ஒரு முக்கோணத்தில் உள்ள 6 முக்கியப் புள்ளிகள் வழியாக ஒரு வட்டம் செல்கிறது என்பதைக் கண்டுபிடித்தார். அதற்கு 6 புள்ளி வட்டம் என்று பெயரிட்டார். அதன்பின் சுமார் 10 ஆண்டுகள் கழித்து பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஓர்லி டெர்க்கெம் என்பவர் மேற்கூறிய 6 புள்ளி வட்டம் ஒரு முக்கோணத்தில் மேலும் கூடுதலாக 3 முக்கியப் புள்ளிகள் வழியாகச் செல்கிறது. என்பதைக் கண்டுபிடித்தார். எனவே அதற்கு 9 புள்ளி வட்டம் என்று பெயரிட்டார். அதனைத் தொடர்ந்து தற்போது சுமார் 200 ஆண்டுகள் கழித்து தமிழராகிய இராசா கிளைமாக்சு, அந்த வட்டம் ஒரு முக்கோணத்தில் மேலும் கூடுதலாக 3 புள்ளிகள் வழியாகச் செல்கிறது என்பதைக் கண்டுபிடித்து அவ்வட்டத்திற்கு 12 புள்ளி வட்டம் எனப் பெயரிட்டு உள்ளார்.
இந்த புதிய கண்டுபிடிப்பை இத்தாலியில் நடைபெறும் கணித மாநாட்டில் உலகக் கணிதமேதைகள் நடுவில் எடுத்துரைத்தார். இவரது மற்ற கண்டுபிடிப்புகள் www.maxgeometricmaths.co.in என்ற இணையதளம் வழியாக அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வின் போது
பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் நௌசாத் மற்றும்
பள்ளி ஆசிரியர் பெருமக்கள் மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.