மதுரை நாகமலை புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள கேஎம்ஆர் சர்வதேச பள்ளியில் நடைபெற்ற
சஹோதய மதுரை மாவட்ட அளவிலான கபாடி போட்டியில்
மதுரை மாவட்டதிலிருந்து 22 மாணவர் அணிகளும் 11 மாணவியர் அணிகளும் பங்கேற்றன. சிறப்பாக நடைபெற்ற இப்போட்டிகளில் KMR சர்வதேச பள்ளி 17 வயதிற்கு உட்பட்ட மாணவர் மற்றும் 14 வயதிற்கு உட்பட்ட மாணவர் பிரிவில் முதல் பரிசுகளை தட்டிசென்றது.
மாணவியர் அணியில் 17 வயதிற்கு உட்பட்ட மாணவியர் முதல் பரிசும் 11 வயதிற்கு உட்பட்ட மாணவியர் இரண்டாவது இடத்தையும் பிடித்தனர்.பரிசுகளை பெற்ற KMR சர்வதேச பள்ளி மாணவர்களை பள்ளி தாளாளர் பூ.கிருஷ்ணவேணி பாராட்டி பரிசுகளை வழங்கினார்.
இப்போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களையும் வெகுவாக பாராட்டி ஊக்கப்படுத்தினார்.
இதில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர் பெருமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.