மதுரை அக்டோபர் 10,
மதுரை மாவட்டம் அமெரிக்கன் கல்லூரியில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேலை வாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டும் மையம் திறன் மேம்பாட்டு கழகத்தின் மண்டல அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு மற்றும் தொழில் பயிற்சி முகாமினை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அரசு செயலாளர் சிஜி தாமஸ் வைத்யன் துவக்கி வைத்து பார்வையிட்டு பணி நியமன ஆணைகளை வழங்கினார். மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா உதவி ஆட்சியர் (பயிற்சி) வைஷ்ணவி பால் ஆகியோர் உடன் உள்ளார்.